செய்திகள்

பெங்களூருவில் பயங்கரம் – மனைவி உட்பட 7 பேரை கொ* செய்த கார் ஓட்டுநர் கைது!

பெங்களூருவில் பயங்கரம் – மனைவி உட்பட 7 பேரை கொ* செய்த கார் ஓட்டுநர் கைது!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேரை அடுத்தடுத்து கொ* செய்ததாகக் கூறப்படும் கார் ஓட்டுநர் இந்துஷேகரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிடைத்த தகவலின்படி, இந்துஷேகர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தனது குடும்பத்தினருடன் மனைவி தொடர்பில் இருக்கக் கூடாது என அவர் ஏற்கெனவே எச்சரித்ததாகவும், அதனை மீறி மனைவி குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மனைவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் அடுத்தடுத்து கொ* செய்து, அவர்களது உடல்களை மலைப்பகுதியில் வீசியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த இந்துஷேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் கொ* செய்யப்பட்டவர்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.