செய்திகள்

‘ஹவுஸ் வைஃப்’ போல ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’களும் இருக்கலாம்! உயர்நீதிமன்றம் கருத்து

‘HOUSE WIFE’ இருக்க முடியும் என்றால் ‘HOUSE HUSBAND’களும் இருக்கலாம்! திருமணம் குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய கருத்து

குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்கும் சமமானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியினர் தொடர்ந்த வழக்கில், கணவர் விவாகரத்து கோரியும், மனைவி திருமண உரிமைகளை மீட்டெடுக்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருவரின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.

விசாரணையின்போது, குடும்பத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டும் பொறுப்பும், வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பும் கணவன், மனைவி இருவருக்கும் சமமானது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் சூழலில், திருமணம் தங்களது தொழில் வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் என சில பெண்கள் கருதுவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

‘HOUSE WIFE’ இருக்க முடியும் என்றால், ‘HOUSE HUSBAND’களும் இருக்க முடியும் என்றும், கணவர்கள் வீட்டு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது திருமணம் மற்றும் குடும்ப அமைப்பை வலுப்படுத்த உதவும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வீட்டு பராமரிப்பில் மனைவி மேற்கொள்ளும் பணிகளுக்கு பொருளாதார மதிப்பு இருப்பதை உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *