செய்திகள்

நெல்லை – திருச்செந்தூர் ரயில் சேவை 7 நாட்களுக்கு ரத்து! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ல்லை - திருச்செந்தூர் ரயில் சேவை 7 நாட்களுக்கு ரத்து! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் இரண்டு முக்கிய பயணிகள் ரயில்கள் 7 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் (56004) மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் (56003) ஆகிய இரண்டும் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த ரயில் சேவை ரத்து நடவடிக்கை செப்டம்பர் 22, 23, 24, 25, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனால், இந்த நாட்களில் நெல்லை – திருச்செந்தூர் இடையே பயணம் செய்யும் பயணிகள் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *