செய்திகள்

இளையராஜா இசையில் ‘ஒன்ன தொட்டு’.. வெளியான ‘Dorothy’ 3வது பாடல்!

இளையராஜா இசையில் ‘ஒன்ன தொட்டு’.. வெளியான ‘Dorothy’ 3வது பாடல்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Dorothy’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

1990களின் மதுரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘ஒன்ன தொட்டு’ என்ற 3வது பாடல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘Dorothy’ படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ள இப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இளையராஜாவின் இசையில் வெளியாகியுள்ள ‘ஒன்ன தொட்டு’ பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *