செய்திகள்

7 மாத காத்திருப்புக்கு முடிவு! அக்.11ல் திறக்கப்படும் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ?

7 மாத காத்திருப்புக்கு முடிவு! அக்.11ல் திறக்கப்படும் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ?

சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை, அக்டோபர் 11-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தின் கீழ், மொத்தம் 118.9 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிகள் பயன்பாட்டுக்கு தயாராகியுள்ள முதல் முக்கிய வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் பாதையாகும்.

இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. பூந்தமல்லி புறவழிச்சாலை, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய பகுதிகள் இந்த வழித்தடத்தில் இணைக்கப்படுகின்றன.

இந்த பாதை பயன்பாட்டுக்கு வந்தால் பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட மேற்கு சென்னை பகுதிகளில் இருந்து வடபழனி மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யும் மக்களுக்கு கூடுதல் பொதுப் போக்குவரத்து இணைப்பு கிடைக்கும். குறிப்பாக ஆர்காட் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து மெட்ரோ மூலம் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் இறுதி அனுமதி கடந்த மே மாதம் கிடைத்திருந்த நிலையில், திறப்பு விழா தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த மெட்ரோ சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியா

மேலும், தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஒரே அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மெட்ரோ சேவை தொடங்கிய பிறகு ஆரம்ப கட்டத்தில் இந்த 14.64 கிலோமீட்டர் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் மேற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு புதிய போக்குவரத்து வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *