தமிழகத்திற்கு முதலிடம்! அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு சாதனை
அந்நிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், தமிழ்நாடு 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய திறன் மற்றும் சேவைத்துறை சார்ந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், சேவைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு ஆர்வம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முக்கிய இடத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
