ரூ.53 கோடியில் கட்டப்பட்ட வண்ண மீன்கள் வர்த்தக மையம் செயல்பாடின்றி தவிப்பு
சென்னை வில்லிவாக்கத்தில் ரூ.53 கோடி செலவில் கட்டப்பட்ட கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், திறக்கப்பட்டு ஓராண்டு கடந்தும் எதிர்பார்த்த அளவில் செயல்படாமல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
188 கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் சுமார் 10 கடைகள் மட்டுமே திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், வண்ண மீன்களை பராமரிக்க தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த வர்த்தக மையம், தற்போது முழுமையான பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
