செய்திகள்

தாய் மாமனாய் குழந்தையை தூக்கி திட்டத்தை துவக்கி வைத்த CM Vijay

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய் மாமன் திட்டத்தை தொடங்கி முதலமைச்சர் விஜய் வைத்தார்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் வாா்டில் நடைபெறும் தொடக்க விழாவில், குழந்தைகளுக்கு தமிழக முதல்வா் விஜய் தங்க மோதிரத்தை அணிவித்து, இந்தத் திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து இன்று காலை தனிவிமானம் மூலம் மதுரைக்கு முதல்வர் விஜய் சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு முதல்வர் விஜய் பயணித்து வருகிறார்.

வழிநெடுங்கிலும் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டார். வேனின் மேலே நின்றவாறு தொண்டர்களுக்கு கையசைத்தார்.

இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். முதல் குழந்தையான முத்து யாழினி எனும் பெண் குழந்தைக்கு மோதிரம் அணிவித்து திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் மேற்கொள்கிறார்.

முதல்வரின் வருகையையொட்டி, மதுரை முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *