செய்திகள்

காதில் எப்போதும் Earbuds-ஆ? இந்த Warning உங்களுக்குத்தான்!

காதில் எப்போதும் Earbuds-ஆ? இந்த Warning உங்களுக்குத்தான்!

இந்தியாவில் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்ஃபோன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களின் காது ஆரோக்கியம் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட தகவலின்படி, பாதுகாப்பற்ற முறையில் அதிக சத்தத்தில் ஆடியோ கேட்பதால் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் காது கேளாமை ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

அதிக சத்தத்திலும், நீண்ட நேரமும் இயர்பட்ஸ் பயன்படுத்துவது காதின் உள்பகுதியில் உள்ள முக்கியமான உணர்வு செல்களை பாதிக்கக்கூடும். இதனால் நிரந்தர காது கேளாமை மட்டுமின்றி, வெளியில் எந்த சத்தமும் இல்லாதபோதும் காதில் இரைச்சல் கேட்கும் ‘டினிடஸ்’ பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தவிர்க்க 60/60 விதி யை பின்பற்ற WHO பரிந்துரைக்கிறது. அதாவது, சாதனத்தின் அதிகபட்ச ஒலியளவில் 60 சதவீதத்திற்கும் குறைவாக சத்தத்தை வைத்துக்கொண்டு, தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு மேல் இயர்பட்ஸ் பயன்படுத்தாமல் இடைவேளை எடுக்க வேண்டும்.

மேலும், சத்தமான இடங்களில் வெளிப்புற சத்தத்தை சமாளிக்க இயர்பட்ஸ் ஒலியளவை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும். காதுகளில் தொடர்ந்து இரைச்சல், கேட்கும் திறன் குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *