செய்திகள்

வங்கிகள் வேலைநிறுத்தம் இல்லை! 3 நாட்களும் வழக்கம்போல் செயல்படும்!

வங்கிகள் வேலைநிறுத்தம் இல்லை! 3 நாட்களும் வழக்கம்போல் செயல்படும்!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தன.

இந்த நிலையில், இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குவது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வங்கி ஊழியர்களின் மற்ற கோரிக்கைகள் குறித்தும் பரிசீலித்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 3 நாட்கள் நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் அடுத்த 3 நாட்களும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *