செய்திகள்

வீட்டுக்கு புதிய TV, AC வாங்கப் போறீங்களா? முதலில் இதை பாருங்க!

வீட்டுக்கு புதிய TV, AC வாங்கப் போறீங்களா? முதலில் இதை பாருங்க!

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பலரும் வீடுகளுக்குத் தேவையான புதிய AC, TV, Fridge, Washing Machine உள்ளிட்ட பொருட்களை வாங்கத் திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை காலங்களில் நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகளுக்காக பலரும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 1 முதல் பல்வேறு நுகர்வோர் சாதனங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகளவில் நிலவும் போர் பதற்றம், கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட காரணங்களால் மூலப்பொருட்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான செலவுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, AC தயாரிப்பில் பயன்படுத்தப்படும் Copper, Steel, Aluminium, Plastic உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனுடன் உதிரிபாகங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வும் உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, AC-களின் விலை சுமார் 5 முதல் 8 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், LED TV, Washing Machine, Refrigerator உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் சுமார் 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், சில முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே விலை உயர்வை அமல்படுத்தியுள்ளதாகவும், சில நிறுவனங்கள் அக்டோபர் 1 முதல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பண்டிகை கால விற்பனையை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் நிறுவனங்களின் தள்ளுபடி, Exchange Offer மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை பொறுத்தே வீட்டு உபயோகப் பொருட்களின் இறுதி விலை அமையும்.

அதனால், தீபாவளிக்கு புதிய AC, TV அல்லது பிற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள், தற்போதைய விலை மற்றும் பண்டிகை கால சலுகைகளை ஒப்பிட்டு வாங்குவது முக்கியமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *