செய்திகள்

தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.. தேதி இதோ!

தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.. தேதி இதோ!

நடிகர் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கிய ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அக்டோபர் 2, 2026 முதல் JioHotstar தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம், நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு இணையின் நடிப்பால் கவனம் பெற்றது. திரையரங்க வெளியீட்டுக்கு சுமார் ஆறு வாரங்களுக்குப் பிறகு தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

படத்தின் கதை என்ன?

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தில் நிவின் பாலி ஜஸ்டின் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மமிதா பைஜு ஆஷ்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆஷ்லி தனது குடும்பத்துடன் புதிய இடத்திற்கு குடிபெயர்ந்த பிறகு, அண்டை வீட்டில் வசிக்கும் ஜஸ்டினுடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. இருவரைச் சுற்றி உருவாகும் உறவு, காதல், குடும்பம் மற்றும் அக்கம் பக்கத்தினரின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

முக்கிய கதாபாத்திரங்கள்

நிவின் பாலி, மமிதா பைஜு ஆகியோருடன் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷ்யாம் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

பல மொழிகளில் ஓடிடி வெளியீடு

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் JioHotstar-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள், வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் வீட்டிலிருந்தபடியே இப்படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *