செய்திகள்

வேலையில்லா பட்டதாரி படத்தை குறிப்பிட்டு விஜய்யை விமர்சித்த கனிமொழி!

வேலையில்லா பட்டதாரி படத்தை குறிப்பிட்டு விஜய்யை விமர்சித்த கனிமொழி!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி, தவெக தேர்தல் வாக்குறுதிகளில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால், அந்தத் தொகை கிடைத்ததா என கேள்வி எழுப்பிய அவர், ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் நடித்த நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்துவிட்டார் எனக் குறிப்பிட்டார்.

மேலும், குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி குறித்தும் கனிமொழி கேள்வி எழுப்பினார். இதேபோல், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய கனிமொழி, இதுகுறித்து விஜய் ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

தாராபுரம் தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *