கவின் ஆணவக் கொல* வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோருக்கு நிம்மதி!
நெல்லை கவின் ஆணவக் கொல* வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் கவின் செல்வகணேஷ் கொல* செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவினின் காதலியின் சகோதரர் சுர்ஜித் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.
மேலும், சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சுர்ஜித்தின் பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மற்றும் வழக்கின் சூழ்நிலைகளை பரிசீலித்து பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் திரும்பியுள்ளது.

One thought on “கவின் ஆணவக் கொல* வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோருக்கு நிம்மதி!”