மணிகண்டன் பிறந்தநாள்.. ‘மக்கள் காவலன்’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!
நடிகர் மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘மக்கள் காவலன்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதனிடையே, ‘மக்கள் காவலன்’ திரைப்படம் தொடர்பான புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள அந்த அப்டேட் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
