செய்திகள்

“இது என் வாழ்வின் சிறப்பான தருணம்!” – தேவா பாராட்டில் ஆதி

“இது என் வாழ்வின் சிறப்பான தருணம்!” – தேவா பாராட்டில் ஆதி

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்து வரும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் தேவா, படத்தை பாராட்டியுள்ளார். தேவாவின் இந்த பாராட்டு ஹிப் ஹாப் ஆதிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் கானா இசையை மக்களிடம் கொண்டு சென்ற முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா, ‘மீசைய முறுக்கு 2’ படத்தை பாராட்டியிருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என ஆதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஹிப் ஹாப் ஆதி, “இது போதும் எனக்கு… இது போதுமே” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், “தேவா ஐயாவிற்கு நன்றி” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இசைப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தேவா போன்ற ஒரு முன்னணி இசையமைப்பாளர் தனது படத்தை பார்த்து பாராட்டியிருப்பது தனக்கு பெருமையான தருணம் என்றும் ஆதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *