செய்திகள்

மின்வாரிய தனியார்மய நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கரூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்!

மின்வாரிய தனியார்மய நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கரூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கரூர் மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மின்சாரத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்றும், நிரந்தரத் தன்மை கொண்ட பணிகளில் ஒப்பந்த முறையை தவிர்த்து நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தமிழக மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும், மின் விநியோகத்தை தனியார் மயமாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கரூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 30-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *