செய்திகள்

பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் இல்லை.. கைலாசநாதர் கோயிலின் நிலை என்ன?

பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் இல்லை.. கைலாசநாதர் கோயிலின் நிலை என்ன?

ஆலயம், கடந்த 22 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது.

பல ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த ஆலயத்தில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோயிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தாலும், நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாததால் திருப்பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோயிலின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்பை பாதுகாக்கும் வகையில் தேவையான புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,

ஆலயத்தின் கட்டமைப்பு மற்றும் சிற்பங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

22 ஆண்டுகளாக கும்பாபிஷேகத்தை எதிர்நோக்கி வரும் கைலாசநாதர் ஆலயம், மீண்டும் விழாக்கோலம் காணும் நாளை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *