செய்திகள்

சேதமடையும் சீனப் பெருஞ்சுவர்.. சமூக ஆர்வலர்கள் கவலை!

சேதமடையும் சீனப் பெருஞ்சுவர்.. சமூக ஆர்வலர்கள் கவலை!

உலகின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர், காலநிலை மாற்றம், இயற்கை அரிப்பு மற்றும் மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக பல பகுதிகளில் சேதமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல நூற்றாண்டுகள் பழமையான இந்தப் பெருஞ்சுவரின் சில பகுதிகளில் கற்கள் மற்றும் செங்கற்கள் சிதைவடைந்துள்ளதுடன், சில இடங்களில் சுவர் பகுதிகள் இடிந்து விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மழை, காற்று உள்ளிட்ட இயற்கை காரணிகளுடன், சுற்றுலாப் பயணிகளின் அதிகப்படியான நடமாட்டமும் சுவரின் பாதுகாப்பை பாதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நினைவுச் சின்னத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *