செய்திகள்

6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி!

6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி!

6 மாதங்களாக ரேஷன் கடைகளில் எந்தவிதமான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்காத ரேஷன் கார்டுகளை நாளை முதல் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நீண்ட காலமாக எந்தப் பொருட்களையும் வாங்காமல் இருக்கும் ரேஷன் கார்டுகளை கண்டறிந்து, அவற்றை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத குடும்பங்களின் ரேஷன் கார்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரேஷன் கார்டுகளை நீக்கி, போலி அல்லது பயன்பாட்டில் இல்லாத கார்டுகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 58 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, தொடர்ந்து பயன்படுத்தப்படும் கார்டுகளுக்கு மட்டுமே உணவுப் பொருட்கள் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டின் நிலையை சரிபார்த்துக் கொள்வது அவசியமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *