செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.. காஞ்சிபுரத்தில் நலத்திட்ட முகாம் தொடக்கம்!

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.. காஞ்சிபுரத்தில் நலத்திட்ட முகாம் தொடக்கம்!

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சுல்தானா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

முகாமில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அவர்களின் உடல்நலம் தொடர்பான பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

இதுதவிர, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல், ஆதார் தொடர்பான பதிவு மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் முகாமில் மேற்கொள்ளப்பட்டன. இன்று நாள் முழுவதும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கான பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சுல்தானா, தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்த முகாமில், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *