மேடையில் கண்ணீர் விட்ட சத்யபாமா!சத்யபாமாவின் தோளைத் தட்டிய விஜய் …
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா மேடையில் கண்ணீர் விட்டு பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சத்யபாமா, தன்னைப் பற்றி சிலர் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதாக வேதனை தெரிவித்தார். மேலும், “நான் எந்த தப்பும் செய்யவில்லை” எனக் கூறி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.

இதையடுத்து அருகில் இருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சத்யபாமாவின் தோளைத் தட்டிக் கொடுத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சத்யபாமாவை ஆதரித்து விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக தாராபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சத்யபாமா கண்ணீர் விட்டு பேசியதும், விஜய் அவருக்கு ஆறுதல் தெரிவித்ததும் கூட்டத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
