செய்திகள்

11 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய Wired Earphones.. Bose-ன் புதிய சாதனம் வெறும் $99!

11 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய Wired Earphones.. Bose-ன் புதிய சாதனம் வெறும் $99!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு Bose நிறுவனம் புதிய வயர்டு இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Bose Ultra Open Earbuds உள்ளிட்ட வயர்லெஸ் சாதனங்களுக்கு பிறகு, தற்போது வயர்டு இயர்போன் சந்தையிலும் புதிய தயாரிப்புடன் களமிறங்கியுள்ளது.

Bose நிறுவனத்தின் புதிய Bose Ultra Wired Earbuds இயர்போனின் விலை 99 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,000-க்கும் அதிகமாக இருக்கும். நீண்ட காலமாக வயர்லெஸ் இயர்போன்கள் பிரபலமாகி வரும் நிலையில், Bose மீண்டும் வயர்டு மாடலை அறிமுகப்படுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இந்த புதிய இயர்போன் USB-C இணைப்புடன் வருகிறது. இதனால் 3.5mm ஹெட்போன் ஜாக் இல்லாத நவீன ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் பிற சாதனங்களுடன் நேரடியாக இணைக்க முடியும்.

வயர்லெஸ் இயர்போன்களில் பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும் நிலையில், வயர்டு இயர்போன்களில் அந்த பிரச்சனை இல்லை. மேலும், ஆடியோ தாமதம் குறைவாக இருப்பதால் இசை கேட்பது, திரைப்படங்கள் பார்ப்பது மற்றும் கேமிங் போன்ற பயன்பாடுகளுக்கும் வயர்டு இயர்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு Bose மீண்டும் புதிய வயர்டு இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது இந்த சாதனின் முக்கிய கவனத்தை ஈர்க்கும் அம்சமாக உள்ளது. புதிய தலைமுறை பயனர்களின் தேவைக்கு ஏற்ப USB-C இணைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் இந்த இயர்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *