செய்திகள்

மதுராந்தகம் ரோடு ஷோவில் எம்.ஜி.ஆர். நினைவுகள்.. விஜய்யின் பிரசாரத்தில் கவனம் ஈர்த்த காட்சிகள்!

மதுராந்தகம் ரோடு ஷோவில் எம்.ஜி.ஆர். நினைவுகள்.. விஜய்யின் பிரசாரத்தில் கவனம் ஈர்த்த காட்சிகள்!

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மாமண்டூரில் தொடங்கிய அவரது ரோடு ஷோ, மதுராந்தகம் வரை சுமார் 35 கிராமங்கள் வழியாக நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக திறந்த வாகனத்தில் பயணித்து விஜய் வாக்கு சேகரித்தார்.

இந்தப் பிரசாரத்தின் போது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை விஜய் சந்தித்து உரையாடினார். மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும், டீக்கடையில் தேநீர் அருந்தியது, வயலில் டிராக்டர் ஓட்டியது உள்ளிட்ட நிகழ்வுகளும் கவனம் பெற்றன.

இந்நிலையில், சோத்துப்பாக்கம் பகுதியில் தொண்டர் ஒருவர் வழங்கிய எம்.ஜி.ஆர். தொப்பியை விஜய் அணிந்து கொண்டது பிரசாரத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்றாக அமைந்தது. இதனால், ரோடு ஷோவின் போது எம்.ஜி.ஆர். தொடர்பான காட்சியும் பேசுபொருளாகியுள்ளது.

மாமண்டூரில் தொடங்கிய இந்த ரோடு ஷோ, மதுராந்தகத்தில் நிறைவடைந்தது. இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய்யின் இந்த நீண்ட பயணப் பிரசாரம் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *