செய்திகள்

பல உயிர்களை காப்பாற்றிய சுமித்.. வீடியோ காலில் மோடி சொன்ன முக்கிய வார்த்தைகள்!

பல உயிர்களை காப்பாற்றிய சுமித்.. வீடியோ காலில் மோடி சொன்ன முக்கிய வார்த்தைகள்!

ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தின்போது பயணிகளின் உயிரைக் காப்பாற்ற போராடிய இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சாரிடம் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விமானத்தின் காக்பிட்டில் துணை விமானியால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையிலும், சுமித் மச்சார் காக்பிட் கதவை திறக்க போராடியுள்ளார். இதையடுத்து பயணிகள் உள்ளே சென்று தாக்குதலை கட்டுப்படுத்தியதுடன், விமானம் சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிரதமர் மோடியிடம் பேசிய சுமித், தான் உயிருக்கு போராடிய தருணத்திலும் மற்ற பயணிகள் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக தெரிவித்தார். கடைசி முயற்சியாக காக்பிட் கதவை திறந்ததாகவும் அவர் கூறினார்.

இதனை பாராட்டிய பிரதமர் மோடி, “இந்தியர்கள் உயிரைப் பறிப்பவர்கள் அல்ல; மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற தங்களது உயிரையும் பணயம் வைப்பவர்கள்” என்று கூறினார். மேலும், சுமித்தின் தைரியம், நிதானம் மற்றும் சில நொடிகளில் அவர் எடுத்த முடிவுகள் பல உயிர்களை காப்பாற்றியதாக பாராட்டினார்.

சுமித் மச்சாரின் இந்த செயல் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ள நிலையில், விமானி விரைவில் குணமடைய நாடு முழுவதும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *