செய்திகள்

நிவாரணமே விபரீதமானது.. ஹெலிகாப்டரில் இருந்து விழுந்த பொருளால் முதியவர் உ*ரிழப்பு!

நிவாரணமே விபரீதமானது.. ஹெலிகாப்டரில் இருந்து விழுந்த பொருளால் முதியவர் உ*ரிழப்பு!

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உ*ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் சாரன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பர்ஷுராம்பூர் கிராமத்தில் உள்ள நிவாரண முகாம் அருகே வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருட்கள் வானிலிருந்து வீசப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருள் ஒன்று, அங்கு நிவாரணப் பொருட்களை பெறுவதற்காக காத்திருந்த அனில் குமார் சிங் என்ற முதியவர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் உ*ரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், நிவாரணப் பொருள் அவர் மீது விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாகவும், ஆனால் உ*ரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அதே நிவாரண நடவடிக்கையின்போது ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறந்ததால் ஏற்பட்ட காற்றின் வேகத்தில் ஒரு கூடாரத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட இந்த சோக சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பான முறையில் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதன் அவசியத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *