செய்திகள்

அரசு வேலைக்கு தயாரா? TNPSC Group 4 அறிவிப்பு அக்.6-ல்.. தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்!

அரசு வேலைக்கு தயாரா? TNPSC Group 4 அறிவிப்பு அக்.6-ல்.. தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் அரசு வேலைக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது. 2026-ம் ஆண்டுக்கான TNPSC Group 4 தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Group 4 தேர்வு என்பது தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் எழுதும் முக்கியமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகும். VAO, Junior Assistant, Typist, Steno-Typist உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு இந்தத் தேர்வு மூலம் நடைபெறுகிறது.

தேர்வு எப்போது?

2026-ம் ஆண்டுக்கான Group 4 தேர்வு டிசம்பர் 20, 2026 அன்று நடைபெறும் என TNPSC ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே, அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் அறிவிப்பில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தகுதிகள், விண்ணப்பிக்கும் தேதி, தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2025-ம் ஆண்டு Group 4 ஆட்சேர்ப்பில் ஆரம்பத்தில் 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த கூடுதல் அறிவிப்புகளின் மூலம் மொத்த காலிப்பணியிடங்கள் 5,307 ஆக உயர்த்தப்பட்டன.

இதனால், 2026 Group 4 தேர்வில் எத்தனை பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்பது தேர்வர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை உறுதியாகக் கூற முடியாது.

Group 4 தேர்வை எதிர்பார்த்து தயாராகி வரும் தேர்வர்கள், அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனித்து, அதில் குறிப்பிடப்படும் தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *