செய்திகள்

தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. சென்னையில் இன்று எப்படி இருக்கும் வானிலை?

தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. சென்னையில் இன்று எப்படி இருக்கும் வானிலை?

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அடுத்த சில நாட்களும் தொடரும் என வானிலை மையத்தின் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. குறிப்பாக அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், சென்னை கடலோரப் பகுதிகளில் இன்று கடல் நீரோட்டம் தொடர்பான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே கடற்கரைக்கு செல்வோர் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *