“ஒன்றரை வருடம் காதலித்தேன்.. சுமூகமாக பிரிந்தோம்!” காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்

அப்போது பேசிய ஜேசன் சஞ்சய், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருவரை காதலித்ததாக தெரிவித்துள்ளார். அந்த காதல் உறவு சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டில் திரைப்படம் தொடர்பான படிப்பை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த உறவு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து பேசிய அவர், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு பிரியவில்லை என்றும், இருவரும் பேசி சுமூகமாகவே பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பிரிவை ‘மியூச்சுவல் பிரேக்கப்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காதல் பிரிவுக்குப் பிறகு அந்த காலகட்டத்தை எப்படி கடந்து வந்தார் என்பது குறித்தும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார். பிரேக்கப் நேரத்தில் யுவன் சங்கர் ராஜாவின் காதல் பாடல்களை அதிகமாக கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பாடல்கள் தனக்கு அப்போது ஆறுதலாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், பிரிவுக்குப் பிறகு சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் தொடர்பில் இருப்பதை தவிர்த்து, இருவரும் தங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை வைத்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த உறவில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த காதல் குறித்து எந்த வருத்தமும் இல்லை என்றும், அந்த நேரத்தில் நடந்தது நல்லதாகவே இருந்ததாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். “நாம் நம்முடைய வாழ்க்கையை நோக்கி நகர்கிறோம்” என்ற மனநிலையுடன் அந்த அத்தியாயத்தை கடந்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
காதல் பிரிவுக்குப் பிறகு தனது முழு கவனத்தையும் திரைப்பட உருவாக்கத்தில் செலுத்தியதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே தனது முதல் படமான ‘சிக்மா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது காதல் வாழ்க்கை குறித்த இந்த வெளிப்படையான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது
