செய்திகள்

“தளபதி நல்லா இருக்கிறாரா?”.. விஜயின் அம்மாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி.. என்ன சொன்னார் தெரியுமா?

“தளபதி நல்லா இருக்கிறாரா?”.. விஜயின் அம்மாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக முதல்வரும் நடிகருமான விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி சென்ற அவர், பாரம்பரிய உடையில் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். இந்த தகவலை ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, திருப்பதி கோவிலுக்கு வந்திருந்த ஷோபா சந்திரசேகரை பார்த்த ரசிகர்கள் அவரிடம் அன்புடன் பேசினர். அப்போது ரசிகர் ஒருவர், “தளபதி நல்லா இருக்கிறாரா?” என விஜயின் நலம் குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஷோபா சந்திரசேகர், “நல்லா இருக்கிறார்” என பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் அரசியல் பயணத்துக்குப் பிறகும், அவரை ரசிகர்கள் தொடர்ந்து “தளபதி” என்ற செல்லப் பெயரிலேயே அழைத்து வருகின்றனர். விஜயின் தாயாரிடம் ரசிகர் ஒருவர் நேரடியாக அவரது நலம் குறித்து விசாரித்ததும், அதற்கு அவர் சிரித்தபடி பதிலளித்ததும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

தற்போது ஷோபா சந்திரசேகரின் திருப்பதி தரிசனம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *