செய்திகள்

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு.. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘ஆத்தி இவ யார்ரா’!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி இவ யார்ரா’ வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். படத்தின் முதல் பாடல் வெளியானதைத் தொடர்ந்து, சூர்யா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பதால், அவருடைய கதாபாத்திரம் குறித்தும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இந்தப் பாடலை ராஜ்பிரியன் எழுதி பாடியுள்ளார். பாடலின் லிரிக்கல் வீடியோவில் சூர்யா மற்றும் நஸ்ரியா இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, வீடியோ கேம் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

‘சீன்’ திரைப்படம் சூர்யாவின் 47-வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் நஸ்லென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜித்து மாதவன் தமிழில் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பாடலைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *