செய்திகள்

ஓய்ந்தது தேனிசை தென்றல்…இசையமைப்பாளர் தேவா (75) திடீர் உடலநலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்

ஓய்ந்தது தேனிசை தென்றல்...இசையமைப்பாளர் தேவா (75) திடீர் உடலநலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்

தேனிசை தென்றல் தேவா

சென்னை மயிலாப்பூரில் 1950-ல் பிறந்தவர் தேவா; இவரது இயற்பெயர் தேவனேசன் சொக்கலிங்கம்

4 தசாப்தங்களாக நீடித்த திரைப்பயணத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1986-ல் வெளியான ‘மாட்டுக்கரை மன்னாரு’ என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்

அவர் இசையமைத்த முதல் முன்னணி நட்சத்திர திரைப்படம் 1989-ல் வெளியான ‘மனசுக்கேத்த மகாராசா’

1990-ல் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ மூலம் அனைவர் மத்தியிலும் அறியப்பட்டார்

அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என்ற படங்கள் மூலம் ரஜினிகாந்துக்கு பல ஹிட் பாடல்களையும், BGM-களையும் வழங்கியவர் தேவா

ஆசை, காதல்கோட்டை, நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், வாலி, குஷி ஆகிய படங்கள் மறக்க முடியாதவை

தமிழ் சினிமாவில் கானா பாடல்களை பிரபலப்படுத்தியவர் தேவா

1990-ல் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றார்

1992-ல் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார்

1995-ல் ‘ஆசை’ படத்திற்காக மற்றொரு மாநில திரைப்பட விருதை பெற்றார்

திரைக்கதையிலிருந்து திரையிடல் வரை உலகின் அதிவேக திரைப்படமான ‘சிவப்பு மழை’-க்காக கின்னஸ் உலக சாதனை விருது பெற்றார்

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால் பல கோடி ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75), உடல்நலக் குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 17) சென்னையில் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கானா பாடல்களுக்கு தனி அடையாளத்தை உருவாக்கியவர்களில் தேவா முக்கியமானவர். எளிய மக்களின் வாழ்வியலையும், சென்னைத் தமிழின் தனித்துவத்தையும் தனது பாடல்களில் கலந்து ரசிகர்களைக் கவர்ந்தார். காதல், சோகம், கொண்டாட்டம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் இசையமைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

பல தசாப்தங்களாகத் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்து வந்த தேவா, நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது கானா பாடல்களும் மெலடி பாடல்களும் பல தலைமுறை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில், அவரது மறைவுச் செய்தி இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகப் பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உடல் மறைந்தாலும், தேவா இசையமைத்த பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *