நெட்ஃபிளிக்ஸில்[netflix] வெளியாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’! ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவான ‘டோரதி’ திரைப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது ஓடிடி ரசிகர்களையும் சந்திக்கத் தயாராகியுள்ளது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் கிரைம் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம்!
‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சிவா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் தனது Dhammam Films நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். Sikhya Entertainment மற்றும் Jio Studios நிறுவனங்களும் தயாரிப்பில் இணைந்துள்ளன.
திரையரங்குகளில் இப்படத்தைத் தவறவிட்ட ரசிகர்கள், அக்டோபர் 23ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் ‘டோரதி’ திரைப்படத்தைக் காணலாம்
