பெண் குழந்தைக்கு அப்பாவானார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அபிஷன் ஜீவிந்த் தனது மகிழ்ச்சியை ‘A Girl Dad’ என்ற வாசகத்துடன் அறிவித்துள்ளார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், கடந்த 2025ஆம் ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றார். சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்திய அபிஷன், அடுத்ததாக நடிகராகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ள அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
