தவெக ஆட்சியில் தமிழகம் பேரழிவைச் சந்திக்கும் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
தமிழகத்தில் ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தவெக ஆட்சியில் பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரியைவிட தமிழகத்தின் வளர்ச்சி குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்திற்கு வரவிருந்த ரூ.1,614 கோடி மதிப்பிலான கொரிய முதலீடுகள், அரசின் அலட்சியத்தால் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்த ‘Guidance Tamil Nadu’ அமைப்பின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனிநபர்களின் ஈகோவுக்காக அந்த அமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முதலமைச்சர் கவனம் செலுத்தி வருவதாகவும் சாடியுள்ளார்.
இறுதியாக, தவெக ஆட்சியில் தமிழகம் பேரழிவைச் சந்திக்கும் என்றும், மக்கள் கடினமான காலங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
