செய்திகள்

ஆந்திராவில் இருந்து கடத்தல் – 72 கிலோ போ*ப்பொருட்கள் பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து கடத்தல் – 72 கிலோ போ*ப்பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் போலீசார் நடத்திய சிறப்பு சோதனையில் 72 கிலோ க*சா மற்றும் கு*கா உள்ளிட்ட போ*ப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.யு. சிவராமன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகாரே ஆகியோரின் உத்தரவின்பேரில், இரு மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன.

குறிப்பாக, மோப்ப நாய்களின் உதவியுடனும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இந்தச் சோதனையின் முடிவில் மொத்தம் 72 கிலோ போ*ப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 35 கிலோ கஞ்சாவும், 37 கிலோ குட்காவும் அடங்கும்.

இந்தப் போ*ப்பொருட்கள் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள முகவர்களிடமிருந்து பெறப்பட்டு, ராணிப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் மற்றும் செய்யாறு உள்ளிட்ட தொழிற்சாலைப் பகுதிகளில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜேஷ் குமார், அலி கான், சுரேஷ், அக்பர், ஹரிஷ், பாலராமன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தப் போ*ப்பொருள் கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.