அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றார் ராய் கூப்பர்!
அமெரிக்காவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலில் வடக்கு கரோலினா மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ராய் கூப்பர் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுத் தலைவருமான மைக்கேல் வாட்லியை தோற்கடித்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
69 வயதான ராய் கூப்பர், வடக்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் ஆளுநராக இரண்டு முறை பதவி வகித்தவர். மேலும், 2001 முதல் 2017 வரை அந்த மாகாணத்தின் தலைமைச் சட்ட அதிகாரியாகவும் (Attorney General) பணியாற்றியுள்ளார்.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி 53-47 என்ற பெரும்பான்மையுடன் செனட் சபையில் இருந்தது. செனட் சபையைக் கைப்பற்ற ஜனநாயகக் கட்சிக்கு கூடுதலாக நான்கு இடங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில், ராய் கூப்பரின் வெற்றி குடியரசுக் கட்சியிடமிருந்து ஒரு முக்கிய செனட் இடத்தை ஜனநாயகக் கட்சி கைப்பற்ற உதவியுள்ளது.
இதன் மூலம் ஓய்வுபெறும் குடியரசுக் கட்சியின் செனட்டர் தாம் டில்லிஸுக்குப் பதிலாக ராய் கூப்பர் செனட் உறுப்பினராகப் பொறுப்பேற்க உள்ளார்.
