செய்திகள்

பற்றவைத்த Power Bank – அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட Indigo விமானம்..!

டெல்லியிலிருந்து சென்னை சென்ற விமானத்தில் திடீரென தீ பற்றியதால் அவசரமாக ஹைதாராபாத்தில் தரையிறக்கப்பட்டது

புதுடெல்லியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் வெடித்ததால் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டது.

இண்டிகோ நிறுவனத்தின் விமானம் (6E 6115) இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தின் பயணிகள் உடைமைகளை வைக்கும் மேல்புற அறையில் தீப்பற்றி எரிந்தது.

பயணி ஒருவரின் பையில் இருந்த பவர் பேங்க் சாதனம் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தீ எரிவதை பார்த்த பயணிகள் உடனடியாக தங்களின் உடைமைகளை அங்கிருந்த அப்புறப்படுத்தத் தொடங்கினர். இதனால், விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு நடைமுறைகளின்படி இண்டிகோ விமானம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பி விடப்பட்ட நிலையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

விமானப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பயணிகளைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *