திருமாவளவன் காரில் இடம்பெற்ற “CM 2031”!

GOAT பட கார் எண்… இப்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது !

பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் அவர் வருகை தந்தார். இந்த நிலையில், அவருடைய கார் பதிவு எண் “TN 07 CM 2031” என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் காரில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, காரின் பதிவெண்ணில் இடம்பெற்றுள்ள “CM” என்ற எழுத்துகளும், “2031” என்ற எண்ணும் அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. திருமாவளவன் அந்த காரில் நிகழ்ச்சிக்கு வந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. இதையடுத்து, “TN 07 CM 2031” என்ற பதிவெண் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் விஜய் நடித்த GOAT திரைப்படத்தில் “CM 2026” என்ற பதிவு எண் கொண்ட கார் இடம்பெற்றிருந்தது அனைவரது கவனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, GOAT படத்தில் “CM 2026” என்ற பதிவு எண் கொண்ட கார் இடம்பெற்றிருந்தது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இந்தக் கார் எண் வைக்கப்பட்டதாக ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பின்படி 2026 சட்டமன்றத் தேர்தலில் சி. ஜோசப் விஜய் வெற்றி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதேபோல் திருமாவளவனும் 2031 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தனது கார் எண்ணை பதிவு செய்திருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *