சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைந்த தங்கம் விலை!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (அக்.31) அதிரடியாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகச் சரிந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.02 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.310 சரிந்து ரூ.12,730 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில் குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகைகள் வாங்கக் காத்திருப்பவர்களுக்கு இந்த விலைக் குறைவு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் எழுந்துள்ளது.
