ஸ்பெயினில் கோர ரயில் விபத்து! அடுத்தடுத்து மோதிய ரயில்கள் – 69 பேர் உ*ரிழப்பு; பல்வேறு நாட்டினர் ப*!
ஸ்பெயின் நாட்டில் இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 69 பேர் உ*ரிழந்துள்ளனர். உ*ரிழந்தவர்களில் 54 பேர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ஸ்பெயினின் மத்திய பகுதியில் உள்ள டோலிடோ மாகாணத்தின் உர்டா (Urda) என்ற கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாட்ரிட்டில் இருந்து செவில்லே நோக்கிச் சென்ற ரென்ஃபே (Renfe) நிறுவனத்தின் அதிவேக ரயில், தண்டவாளத்தில் ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த இரயோ (Iryo) நிறுவனத்தின் ரயிலின் பின்புறத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 4 பேர், கனடா, ஜப்பான், அர்ஜென்டினா, மெக்சிகோ, துனிசியா, செக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் உ*ரிழந்துள்ளனர். மேலும், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்களும் உ*ரிழந்துள்ளனர்.
உ*ரிழந்த 69 பேரில் 66 பேரின் அடையாளங்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று பேரை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் ஸ்பெயின் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
