கனமழை காரணமாக கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 3) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, இந்த விடுமுறை கடலூர் தாலுகாவில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். கடலூர் மாவட்டத்தின் மற்ற தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான முரசு புயலின் தாக்கத்தால் கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
