மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் பிரசாரம்! 7,000 பேருக்கு மட்டுமே அனுமதி
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் நாளை (செப்டம்பர் 25) பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் 7,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தவெக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.
முதல்வர் விஜயின் பிரசாரத்தையொட்டி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தவெக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு QR குறியீடு கொண்ட அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது
