செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3% உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தற்போது 60% ஆக உள்ள அகவிலைப்படி 63% ஆக உயர்கிறது. இந்த உயர்வு 2026 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் சுமார் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் (DR) 60%-லிருந்து 63%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வால் ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,016.10 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த உயர்வு ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் வெளியான இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது