LJK தலைவரின் முயற்சியால் சரிசெய்யப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு
புதுவை காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணன் நகர் மெயின் ரோட்டில் உயர் அழுத்த மின் கேபிள் புதைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கிருஷ்ணன் நகர் மை பஜார் PWD complex எதிரில் உள்ள பெரிய குடிநீர் குழாய் பள்ளம் தோண்டும் போது விரிசல் ஏற்பட்டு உடைந்து விட்டது.
அதனை கிருஷ்ணா நகர் பகுதி மக்கள் இலட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் திரு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர் காமராஜர் நகர் தொகுதி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள அவரது தொகுதி பொறுப்பாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக சரி செய்து தரும்படி உத்தரவிட்டார்.
அதன்படி மேற்படி ஒப்பந்ததாரர் புது பைப் அமைத்து உடனடியாக சரி செய்து கொடுத்தார். தற்போது கிருஷ்ணா நகர் முழுவதும் குடிநீர் விநியோகம் சரி செய்யப்பட்டது. கிருஷ்ணா நகர் பகுதி மக்கள் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் அவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

