ஐஃபோன் விலை இத்தனை லட்சமா? முதலிடத்தில் எந்த நாடு?
உலக நாடுகளில் ஐஃபோனின் விலை குறித்து வெளியான பட்டியலில், துருக்கி முதலிடத்தில் உள்ளது. உலகிலேயே ஐஃபோனின் விலை அதிகமாக இருக்கும் நாடாக துருக்கி உள்ளது.
துருக்கியில் ஒரு ஐஃபோனின் விலை 2,592 அமெரிக்க டாலர்கள். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் ஆகும். இதன் மூலம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, துருக்கியில் ஐஃபோனின் விலை கணிசமாக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு ஐஃபோனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ஆகும்.
மூன்றாவது இடத்தில் எகிப்து உள்ளது. எகிப்தில் ஐஃபோனின் விலை சுமார் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் ஆகும்.
அடுத்ததாக, நான்காவது இடத்தில் ஹங்கேரி உள்ளது. அங்கு ஐஃபோனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் ஆகும்.
ஐந்தாவது இடத்தில் நார்வே உள்ளது. நார்வேயில் ஐஃபோனின் விலை சுமார் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
இதில் இந்தியாவின் நிலை 24-வது இடம். இந்தியாவில் ஐஃபோனின் விலை சுமார் ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் ஆகும்.
அதே நேரத்தில், ஐஃபோன் தயாரிக்கப்படும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா 39-வது இடத்தில் உள்ளது. அங்கு ஐஃபோனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ஆகும்.
இதன்மூலம், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஐஃபோனின் விலை அதிகமாகவும், துருக்கி உள்ளிட்ட சில நாடுகளில் அதைவிட பல மடங்கு அதிகமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

