பெண்களுக்கு இலவச பயணம் முதல் 3 இலவச சிலிண்டர் வரை.. முதல்வர் விஜயின் அதிரடி அறிவிப்புகள்!

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பொதுமக்கள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட முக்கிய திட்டங்கள் குறித்து அவர் அறிவித்துள்ளார்.

1. ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள்
‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். இதற்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.

2. மகளிர் இலவச பேருந்து பயணம் விரிவாக்கம்
மாநகரம் மற்றும் நகரப் பேருந்துகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்காக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும். இத்திட்டம் அக்டோபர் 2 முதல் நடைமுறைக்கு வரும்.

3. பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *