MS Dhoni ஆட.. Zaheer Khan பயிற்சி கொடுக்க.. வலுப்பெறுகிறதா CSK..?

சி.எஸ்.கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது

பல நாட்களாக யார்ரா அந்த கோச்..? யார்ரா அந்த கோச் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக வரப்போகிறவர் யார் என்கிற கேள்விக்கு ஒரு தரமான அப்டேட்டை வழங்கி ரசிகர்களுக்கு சர்பிரைஸ் அளித்துள்ளது சி.எஸ்.கே நிர்வாகம். இதன்படி இடது கை வேகப் பந்துவீச்சாளரும் 90’s தலைமுறையின் ஃபேவரைட் வீரருமான ஜாகிர் கான் தான் சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஆவார்.

கடந்த 18 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீஃபன் பிளெமிங் அண்மையில் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய தலைமைப் பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இடதுகை வேகப் பந்துவீச்சாளர் சிஎஸ்கேவின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். ஜாகீர் கானை சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக வரவேற்கிறோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

ஜாகிர் கான் தலைமையில் அடுத்த ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே இழந்த பலத்தை திரும்ப பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *