வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை!
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் வடக்கு ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கோபால்பூர் இடையே நாளை காலை கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்க உள்ள பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்த புயலால் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

