செய்திகள்

உணவுக்கு மட்டுமல்ல… சோப்பு, ஷாம்பு, பற்பசைக்கும் சைவம்-அசைவம் குறியீடு!

உணவுக்கு மட்டுமல்ல... சோப்பு, ஷாம்பு, பற்பசைக்கும் சைவம்-அசைவம் குறியீடு!

இனி சோப்பு, ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் பேக்கெட்டிலும், அந்தப் பொருள் சைவமா அல்லது அசைவமா என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் குறியீடு இடம்பெற உள்ளது.

இதற்காக மத்திய அரசு Legal Metrology (Packaged Commodities) Rules, 2011-ல் புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறை செப்டம்பர் 21, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய விதிகளின்படி, சைவப் பொருட்களுக்கு பச்சை நிறப் புள்ளியும், அசைவ மூலப்பொருட்கள் கொண்ட பொருட்களுக்கு சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளியும் பேக்கெட்டின் முக்கிய காட்சிப் பகுதியில் மேல்புறத்தில் இடம்பெற வேண்டும்.

இந்த விதிமுறை சோப்பு, ஷாம்பு, பற்பசை மட்டுமின்றி, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பிற toiletries-க்கும் பொருந்தும்.

இதன் மூலம், பொருளை வாங்கும்போதே அதன் சைவம் அல்லது அசைவ மூலத்தை நுகர்வோர் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *